திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவர் பால் சந்திரமோகன் மீது ஐந்து மாணவிகள் பாலியல் சீண்டல் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரையடுத்து சந்திரமோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீதான புகார் குறித்து மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவின் பேரில் 7 பேர் கொண்ட விசாரணைக்குழு விசாரணை நடத்தியது.
விசாரணை அடிப்படையில் விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட்டது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர் புகாரில் பேரில் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்