திருமண நிதியுதவித் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட விளக்க குறிப்பு பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.
அரசு அறிவிப்பின்படி,
திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது.
வேறு ஏதேனும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கக் கூடாது.
மாடி வீடு – நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்படாது.
ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும்.
பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?
இந்நிலையில், எதன் அடிப்படையில் இவற்றை முடிவு செய்தார்கள் என்பது பிரதான கேள்வியாக எழுந்துள்ளது.
முதலில், ஆண்டு வருமானம் 72000 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது அன்று.
சித்தாள் வேலை செய்யும் பெண்களுக்கு ஒருநாள் ஒன்றுக்கு 500 சம்பளம் என்று வைத்துக்கொண்டால் 500×30=15000 மாதத்திற்கு பெறுபவர். 15000×12=180000 ஆண்டு வருமானம் என்று வைத்துகொண்டால் அவர்களுக்கும் திருமண உதவித்தொகை இனிமேல் கிடையாது கிடைக்காது.
அனால் அவர்களின் அன்றாடத்தேவைகள் எவ்வாறு பன்மடங்காக உயர்ந்து உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளாதது வருத்தமாக உள்ளது.
தமிழ்நாடு: மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை
இன்றைய காலத்தில் அனைத்துத் திருமணங்களும் மண்டபத்தில் தான் நடக்கிறது. திருமண மண்டபத்தில் நடந்தால் உதவித்தொகை கிடையாது என்பதும் மிகவும் அபத்தமாக உள்ளது.
நல்ல வீடு இல்லாததன் காரணமாகத்தான் சமுதாயக் கூடம் ,சின்னச் சின்ன திருமண மண்டபத்தில் நடக்கிறது. திருமண மண்டபத்தில் திருமணம் நடத்தும் அனைவரும் வசதி படைத்தவர்களே என்று எதைவைத்து முடிவு செய்தார்கள் என்றுபுரியவில்லை. இதை எவ்வாறு வசதியின் குறியீடாய்ப் பார்ப்பது ஏற்புடையதும் அல்ல.
மாடி வீடு வைத்திருத்தல் என்பதால் இனி இனித்திருமண உதவி கிடைக்காது என்பதும் எற்புடையது அல்ல. நிதியமைச்சர் முதலில் தமிழகத்தின் பொருளாதர நிலையைத் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும் என்பதுடன் இந்த வரையறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
1 comment
[…] திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அ… […]