நல்லாசிரியர் விருது இவர்களுக்கு மட்டும் தான்… தமிழக அரசு அதிரடி

SHARE

2020-21 ஆம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஆசிரியராக இருந்து இந்தியாவின் குடியரசுத்தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்நாளில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று அழைக்கப்படும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் பள்ளிகளில் கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்கள் மட்டுமே இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள், அலுவலகங்களில்‌ நிர்வாகப் பணி மேற்கொள்ளும்‌ ஆசிரியர்கள்‌ விண்ணப்பிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பரிந்துரைக்கப்படும்‌ ஆசிரியர்கள்‌ எவ்விதக்‌ குற்றச்சாட்டிற்சூம்‌, ஒழுங்கு நடவடிக்கைக்கும்‌ உட்படாதவராகவும்‌, பொதுவாழ்வில்‌ தூய்மையானவராகவும்‌, பொது சேவைகளில்‌ நாட்டம்‌ கொண்டவராகவும்‌, பள்ளி மாணவர்களின்‌ இடைநிற்றலைக்‌ குறைத்தல்‌, பள்ளி மாணவர்‌ சேர்க்கை, தேர்வில்‌ தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல்‌, கல்வித்தரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களின்‌ தரத்தை முன்னேற்றப் பாடுபடுபவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

சிறந்த முறையில்‌ பணிபுரியும்‌ தமிழாசிரியர்கள்‌ மற்றும்‌ சிறப்பு ஆசிரியர்களான ஓவிய ஆசிரியர்கள்‌, உடற்கல்வி ஆசிரியர்கள்‌, கைத்தொழில்‌ ஆசிரியர்கள்‌, இசை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறன்‌ ஆசிரியர்களில்‌ ததியானவர்களையும்‌ விருதிற்குப்‌ பரிந்துரைக்கும்‌போது கவனத்தில்‌கொள்ள வேண்டும்‌.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில்‌ இணையவழிக் கல்வி உள்ளிட்ட மாணவர்களை நேரடியாகச் சென்றடையும்‌ வகையில்‌ கல்விப்‌ பணியாற்றியிருக்க வேண்டும்‌.

கொரோனா காலத்தில்‌ மேற்கூறிய வழிகளில்‌ கல்விப் பணி ஆற்றாத ஆசிரியர்களை அறவே தவிர்க்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 4: ”போர்வெல் பேயி!”

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

மகசூல் – பயணத் தொடர்- பகுதி 3

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

பிக் பாஸ் நாட்கள். நாள் 24 ‘நானும் தலைவர்தான்..!’

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment