வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு நேற்று முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
மூன்று மணிநேரம் உரையாடி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அவையில் பேசிய அமைச்சர், வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தொலைநோக்கு திட்டம்.
வேளாண் வணிகர்களின் கருத்து கேட்கப்பட்ட பின் தான் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கிறோம் என்று கூறினார்.
மேலும் வேளாண் துறையை உழவர் நலத்துறை என பெயர் மாற்றினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்றார்.