அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகளின் விதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்கியுள்ளார்.
ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து முன்னாள் அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவுகள் பலவற்றை நீக்கி வருகிறார்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனத்திற்கு மீண்டும் அமெரிக்கா நிதி வழங்குதல் போன்ற கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மெக்சிகோவிலிருந்து அகதிகள் நுழையாமல் தடுக்க நீண்ட எல்லை சுவர் கட்டும் பணிகளை நிறுத்தினார்.
அந்த வகையில் சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் தற்போது அதிபர் ஜோ பைடன், டிக் டாக், வீ சாட்டிற்கு எதிரான டிரம்பின் நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்து கையெழுத்திட்டுள்ளார்.
அதே சமயம் அந்த செயலிகளின் பாதுகாப்பு பபற்றி ஆராய உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்