கொரோனா காலக்கட்டத்தில் டிஜிட்டல் சேவை பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, பேஸ்புக் இந்தியாவின் வருவாய் 9,000 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று கோர தாண்டவம் ஆடிய நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர்.
இதனால் பொழுது போக்கிற்காகவும், கல்வி கற்கவும், ஷாப்பிங் போன்றவற்றிற்கும் மக்கள் இணையத்தை பயன்படுத்தினர்.
இதனால் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்டவற்றின் ஆண்டு வருமானம் அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் பேஸ்புக்கின் வருவாய் 9,000 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு குறைந்த விலையில் அதிக டேட்டா சேவை, சாதாரண விலைக்கு ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றின் விளைவாக பேஸ்புக், கூகுள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் அதற்கு முந்தைய நிதியாண்டில் 6, 613 கோடி வருவாயை மட்டுமே ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.