உதடுகள் ஒட்டும் குறளும் ஒட்டாத குறளும்…

SHARE

ஒரு கருத்தை எப்படி மிகத் தெளிவாகவும், அதே சமயம் மிகச் சுருக்கமாகவும் சொல்ல முடியும்? – என்பதற்கான உதாரணம்தான் திருக்குறள். ஒவ்வொரு குறளிலும் 7 சொற்கள் மட்டுமே இருந்தாலும், அந்தக் குறள்கள் சொல்லிச் சென்ற செய்திகள் மிகவும் பெரியவை.

திருக்குறளின் அமைப்பை ஆராய்ந்த பல தமிழறிஞர்கள் திருக்குறள் நேரடியாகச் சொல்லாத, ஆனால் தனது அமைப்பு வாயிலாகச் சொல்கின்ற மறைமுக செய்திகளும் திருக்குறளில் நிறைய உள்ளன என்று எடுத்துக் காட்டி உள்ளனர். அவற்றில் ஒன்றுதான் ‘உதடு ஒட்டும் குறள், உதடு ஒட்டாத குறள்’ என்பது.

சில ஆண்டுகள் முன்பு பேருந்துகளில் பயணித்தவர்கள், ‘நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொனால்தான் உதடுகள் கூட ஒட்டும்’ என்ற வரிகளைப் படித்திருக்கலாம். தமிழில் உள்ள வார்த்தைகளை ‘உதடுகள் ஒட்டும் வார்த்தைகள், ஒட்டாத வார்த்தைகள்’ என்று இரண்டு விதமாகப் பிரிக்கவும் முடியும். ஆனால் கவிதை எழுதுபவர்கள் கூட இதையெல்லாம் கவனிப்பது இல்லை. ஆனால் திருவள்ளுவர் இதைக் கவனித்து உள்ளார் என்கின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.

இதற்கு ஆதாரமாக இரண்டு திருக்குறள்களை ஆய்வாளர்கள் காட்டுகின்றனர். முதல் குறள்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் – 341.

இதன் பொருள்: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

இரண்டாவது குறள்:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு – 350.

இதன் பொருள்: எந்த ஒரு பற்றும் இல்லாத இறைவனைப் பற்றுங்கள். பற்றுக்களை விடுதலுக்கு உதவியாக இறைவனைப் பற்றுங்கள். இறைவனைப் பற்றுவது என்பது மனிதன் தன் பற்றுகளை விடுவதற்காகவே என இருக்க வேண்டும். உலக இன்பங்களை வேண்டிப் பெறுவதற்கான வழியாக அதைக் கருதக் கூடாது.

இந்த இரண்டு குறள்களும் துறவு – என்ற ஒரே அதிகாரத்தில் வருகின்றன. முதல் குறளில் நீங்குதலைப் பற்றிக் கூறும் வள்ளுவர் அனைத்து சொற்களையும் உதடு ஒட்டாத சொற்களாகவே பயன்படுத்தி உள்ளார். இரண்டாவதாக உள்ள குறளில் பற்றுதலைக் குறித்து சொல்லும் வள்ளுவர் 6 சொற்களை உதடுகள் ஒட்டும் சொற்களாகப் பயன்படுத்தி உள்ளார்!. இப்போது மீண்டும் படித்துப் பாருங்கள்!.

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

Admin

உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

Admin

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

கொரோனா சான்றிதழில் பிழையா..? திருத்தம் செய்து கொள்ள புதிய வழிமுறை இதோ

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

இரா.மன்னர் மன்னன்

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

Leave a Comment