ஓ.பி.சி., பிரிவுகளுக்கான அரசியல் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வரவேற்பு தெரிவித்து உள்ளார்
.இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் ஓபிசி பட்டியலை தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றி உள்ளது. சமூக நீதி பயணத்தில் இது ஒரு மைல்கல்.
மேலும் இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு எனும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்
மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தனது மற்றொரு ட்விட்டர் பதிவில் கமல்ஹாசன்;
ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள் என மத்திய அர்சினை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்
மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கிராம சபைக்கூட்டம் நடத்த கூடாது என தமிழக அரசின் உத்தர்வை விமர்சித்துள்ள கமல்ஹாசன் முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என்றும்
கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.