ராணி 2ம் எலிசபெத்தை ராணிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓர் நபர் பிரிட்டன் காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார்.
சுதேஷ் அம்மான் என்கிற 20 வயது இஸ்லாமிய வாலிபர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெற்கு லண்டன் பகுதியில் போலி தற்கொலை ஆடை அணிந்து 2 பிரிட்டன் குடிமக்களை கத்தியால் தாக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இவரை விடுவிக்கக் கூடாது என்று உளவுத்துறை எச்சரித்தது.
இந்த நிலையில் இவர் லண்டன் நீதிமன்ற உத்தரவில் விடுவிக்கப்பட்டார்.வெளியே வந்த அம்மான் ஐஎஸ் பயங்கரவாத குழுவில் இணைய ஆர்வம் காட்டினார். ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல தான் ஆர்வமாக இருப்பதாகவும் இதற்காக தான் மனித வெடிகுண்டாக மாறத் தயார் என்றும் முன்னதாக இவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தற்போது இவர் பிரிட்டன் சிறப்பு புலனாய்வு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரிட்டனை அச்சுறுத்தி வந்த மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாதியான அம்மான் கொல்லப்பட்டது நான் நாட்டில் சாதனையாக பார்க்கப்படுகிறது.