கீழடி ஆய்வில் ஒரு அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட பழமையான கல் தூண் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
சங்க காலத் தமிழரின் சிறப்பினையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்யும்போதுநிரூபித்துக் கொண்டிருக்கிறது கீழடி
அந்த வகையில் கீழடி அருகே உள்ளஅகரத்தில் பாசி மணிகள், உறை கிணறு போன்றவையும் கண்டறியப்பட்டது.
அவற்றை தொடர்ந்து தற்போது ஒரு அடி உயரம் ஒரு அடி அகலம் கொண்ட பழமையான கல் தூண் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறும்போது,பழமையான இந்த கல் தூணின் உயரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் வடிவம் முழுமையாக வெளிக்கொணரப்பட்ட பின்னர் அதன் பயன்பாடு குறித்து முழுமையாக தெரியவரும் என கூறினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்