நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்

SHARE

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

கோரிக்கையை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் விதிக்கப்பட்ட அபராத தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, சொகுசு கார் தொடர்பாக உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில், கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தனி நீதிபதி உத்தரவின்படி அபராதத்தொகை 1 லட்சம் ரூபாயை கட்டியதற்கான அறிக்கையை ஜீலை 28ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதால், எண்ணிடும் பணி முடிந்ததும், வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மன அழுத்தத்தில் இருந்து பலரையும் மீட்ட பாடல்: சந்தோஷ் நாராயணன் பெருமை

Admin

நடிகர் மம்முட்டி மீது வழக்குப் பதிவு காரணம் என்ன??

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

வழியெங்கும் வாக்குவாதம்… சென்னை கொண்டு வரப்பட்டார் மீரா மிதுன்…

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

Admin

40 கல்யாணம் பண்ணுவேன் நான்: வனிதா பரபரப்பு பேட்டி!

Admin

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

Admin

பரிதாபமாக காட்சியளிக்கும் சிம்பு… கௌதம் படத்திற்காக எடை குறைந்து அசத்தல்

Admin

ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்

Admin

மாஸ் காட்டிய அண்ணாத்த… விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..

Admin

Leave a Comment