பிரான்சில் நடக்க இயலாத தனது 16 வயது மகனுக்காக பிரத்யேக ரோபோ உடை ஒன்றினை அவரது தந்தை உருவாக்கியுள்ளார்.
பிரான்ஸை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ரோபோட்டிக் பொறியாளருமான ஜீன் லூயிஸ் கான்ஸ்டான்ஸா தனது 16 வயது அன்பு மகன் ஆஸ்கர், சக மனிதர்களை போல் நடக்க ஆசைப்பட்டுள்ளார்.
சக்கர நாற்காலியில் வீட்டை சுற்றி வந்த தனது மகனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று இரவு பகலாக சிந்தித்துள்ளார்.
இதற்கென தீவிர முயற்சியில் ஈடுபட்ட அவர், தனது மகனுக்காக பிரத்யேக ரோபோ உடை ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த உடை ஆஸ்கரின் அசைவிற்கு ஏற்ப உட்காரவும், எழுந்து நிற்கவும், நடக்கவும் உதவிச்செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன தான் சொகுசு வசதியுடன் மருத்துவமனைகளில் காணப்பட்டாலும், ஜூன் தனது மகனின் பயன்பாட்டுக்கு இதனை உருவாக்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பு ஒரு கோடியே 32 லட்சம் என கூறப்படுகிறது.
நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ உடை.