கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தெலுங்கானாவில் கொரோனா ஊரடங்கு நாளை முதல் முடிவுக்கு வரவுள்ளது.
இந்தியாவில் இரண்டாவது அலை வீசத்தொடங்கிய போது அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று.
அங்கு மே 12 ஆம் தேதி முதல் தற்போது வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மற்றும் கொரோனா நேர்மறை சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாகவும் மருத்துவ அதிகாரிகள் அறிக்கைகள் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் ஊரடங்கை முழுவதுமாக நீக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
மேலும் அங்கு அமலில் உள்ள அனைத்து வகையான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் நாளை முதல் விலக்கிக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.