தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்தை தாண்டியுள்ளது.
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவையில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முக்கியமான 9 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கோவை மாநகரில் கிராஸ்கட் சாலை ,100 அடி வீதி, துடியலூர் சந்திப்பு, புரூக்பீல்டு மால் ஆகிய 4 பகுதிகளில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளை மூட கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்திரவு பிறப்பித்துள்ளார். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த நான்கு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகமான கூட்டம் வரும் என்பதால் இந்த கடைகளை மூடவும் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்