தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
.தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதுபிரியர்கள் கூட்டம் காலை முதலே டாஸ்மாக்கை நோக்கி படையெடுத்தது.
அந்த வகையில் திறக்கப்பட்ட முதல் நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.49.54 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
சென்னை மண்டலத்தில் 42.96 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 38.72 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்