தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

SHARE

1956 நவம்பர் 1ஆம் தேதியன்று இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளை பல மாநிலங்களும் தங்கள் மாநில நாளாகக் கொண்டாடி வருகின்றன. இதில் கர்நாடகா, ஆந்திரா, கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவிலேயே நடக்கும். ஆனால் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மாநிலநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது இல்லை. ஆனால் அதனால் தமிழகத்திற்கு மாநில நாளே இல்லை – என்று கூற இயலாது.

1981ஆண்டில் 25ஆவது தமிழ்நாடு நாளை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். கொண்டாடி இருக்கிறார். 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக 50ஆவது தமிழ்நாடு நாளைக் கொண்டாட மறந்தாலும், சில தமிழர் அமைப்புகள் கொண்டாடின. குறிப்பாக கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் பெரும் விழா எடுத்து ‘தமிழ்நாடு 50’ எனக் கொண்டாடினார். அதை அரசு செய்யத் தவறியது குறித்து பேட்டிகளும் அளித்தார்.

அதனைப் பார்த்த அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தொடர்புடைய அமைச்சர்களை ’ஏன் நினைவூட்டல் செய்யவில்லை?’ – என்று கடிந்து கொண்டதோடு, அரசு சார்பில் விழா அறிவித்து, அதே 2006ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியில் ’தமிழ்நாடு 50’ நாளை பெரும் விழாவாக எடுத்தார். இதில் அப்போதைய தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டார்.

நடுவே தமிழர் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடியே வருகின்றன. திமுகவில் உள்ள சிலருக்கு தெரியவில்லை என்றாலும் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதியன்று தமிழ்நாடு தினம் கொண்டாடிவரும் கட்சிகளே!.

இந்தக் கட்சிகள், பல்வேறு தமிழ் அமைப்புகள், பல அறிஞர்கள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்றே 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வந்த தமிழ்நாடு நாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது என்ற அறிவிப்பை அதிமுக அரசு 2019ல் வெளியிட்டது. இது புதிய நாள் குறித்த அறிவிப்பு இல்லை. ஏற்கனவே 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்ட ஒரு நாளை, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது என்பது மட்டும்தான் இதில் புதிய செய்தி.

2020ஆம் ஆண்டில் முதமுறையாக தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்ட போது, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தியும் அனுப்பினார்.

எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி – ஆகிய 3 முதல்வர்கள் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடி உள்ளனர்.

இந்நிலையில் இதுவரை தமிழ்நாடுநாள் குறித்து மாற்றுக் கருத்து தெரிவிக்காத திமுகவினர் இப்போது தமிழ்நாடு நாளை மாற்றுவது சரியா – என்பது மிகப் பெரிய கேள்வி…

அப்படி மாற்றினால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாளைக் கொண்டாடிய கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அது அவமரியாதை ஆகாதா? – என்பது அடுத்த கேள்வி…

1967 ஜூலை 18ல் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது என்பதால் அது முக்கியமான நாள்தான் மாற்றுக் கருத்து இல்லை.

அது போலவே தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்ட 1969-ம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாளும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.இவற்றை பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நாள், பெயர் மாற்றப்பட்ட நாள் – என்ற பெயர்களில் அரசு நினைவு கூறலாம்.

அதிமுக ஆட்சியில் ’தமிழ்நாடு பெயர் சூட்டல் பொன்விழா’ – என்று கடந்த 2018ஆம் ஆண்டில் விழா எடுத்தார்கள். அதை ஒவ்வொரு ஆண்டும் கூட தமிழக அரசு தொடரலாம். ஆனால் அதற்கு மாற்றாக ஏற்கனவே பலரும் கொண்டாடிவரும் நாளை, திடீரென கொண்டாட வந்தவர்கள் மாற்றுவது நியாயம் அல்ல!.

50 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில நாட்களைக் கொண்டாடிவரும் பிற மாநிலங்களையும், ஆண்டுதோறும் தமிழக நாளைக் கொண்டாடிவரும் அமைப்புகளையும் பார்த்து, கேட்டு, ஆய்ந்து, அவசரமில்லாமல் ஒரு முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்!.வரலாறு தொடர்பான விவரங்களில் தமிழக அரசு கூடுதல் கவனமும் செலுத்த வேண்டும்.

– இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

தனது கணக்கில் இருந்து டுவிட் போட்டது யார்?: ஹெச்.ராஜா சொல்லவில்லை, மாஃபா பாண்டியராஜனாவது சொல்வாரா?

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

ஊருல யாருக்கும் கொரோனா வரலை… எல்லாம் அம்மன் மகிமை… நன்றி தெரிவித்த மக்கள்

Admin

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

Leave a Comment