நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

SHARE

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி மாணவர்களிடம் எழுந்தது.

இதற்கிடையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன.

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று இணையத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இருப்பினும் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள்- ராமதாஸ் பாராட்டு

Admin

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

உதயநிதி ஸ்டாலினுடன் இறகுப் பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

இ-பாஸ் ரத்து..பஸ்கள் இயக்கம்… புதிய தளர்வுகளால் மக்கள் மகிழ்ச்சி…

Admin

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

Admin

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

Admin

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

Admin

Leave a Comment