சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவுக்கும் நெடுங்காலமாக பனிப் போர் இருந்து வந்தது.உலக நாடுகள் அமெரிக்கா சார்பு, சோவியத் சார்பு என பிரிந்தும் நின்றன.
இந்தியாவைப் போல இரு அணிகளிலும் சேராமல் அணிசேரா கொள்கையை கடைபிடித்த நாடுகளும் இருந்தன.
1978-ல் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அமைத்தனர்.
1979-ல் இந்த கம்யூனிஸ்ட் அரசு வீழ்ந்ததும் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டையே ஆக்கிரமித்தது
அப்போது சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக யுத்தம் நடத்த அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டவர்களே முஜாஹிதீன்கள்.
சோவியத் ஒன்றியத்துக்கு குடைச்சல் கொடுக்க அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாத கோட்பாட்டை உருவாக்கியது.
அங்கிருந்துதான் ஜிஹாத், புனிதப் போர் என்கிற இன்றைய அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த அகிலத்தையும் ஆட்டுவிக்கும் பயங்கரவாத குழு உருவாக காரணமாக இருந்தது.
சோவியத் ஒன்றியத்தின் படைகளுக்கு எதிராக இஸ்லாம் போராளிகள் கொரில்லா தாக்குதலை நடத்தினர். இதனை அமெரிக்கா அப்போது ஊக்குவித்தது.
10 ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் பல்லாயிரம் ராணுவ வீரர்களை பொதுமக்களை பலிகொடுத்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து 1988-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேறியது
அப்படி சோவியத் ஒன்றியப் படைகள் வெளியேறிய போது அமெரிக்கா உருவாக்கிய இஸ்லாமிய போராளிகளுக்கு இடையே பெரும் மோதல் வெடித்தது.
இந்த யுத்தங்களில் பாகிஸ்தான் ஆதரவுடன் உருவானதுதான் உலகையே நடுங்க வைக்கும் தாலிபான்கள்
ஆப்கானின் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த தாலிபான்களை பாகிஸ்தான் ஆதரித்தது.
பாகிஸ்தானில் இருந்த சிலர் தாலிபான்கள் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு வளர ஆரம்பித்த தாலிபான்கள் 1998-ல் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.
ஆரம்ப காலக்கட்டத்தில் தாலிபன்கள் கொள்கையாக இருந்தது உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுதல் ஆயுதங்களை கைவிடுதல் இருந்தது ஆனால் தனது ஆதிக்கம் வளர்ந்தவுடன் கொள்கைகள் மாறின
அதோடு அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனத் தலைவரான ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் அளித்த குற்றத்திற்காகத் தாலிபன்களுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ஆப்கானிஸ்தானுக்கு 2001-ல் அனுப்பி வைத்தது.
அமெரிக்கப் படைகளின் ஆயுத பலத்திற்கு முன்பு எதிர்த்துப் போரிட முடியாமல் போன தாலிபன்கள் அதுவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காபூல், காந்தஹார், ஜலாலாபாத் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களைத் தாலிபன் எதிர்ப்பு படைகளிடமும், அமெரிக்கப் படைகளிடமும் முழுமையாக ஒப்படைத்து விட்டு வெளியேறினர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான போர் எனச் சொல்லி, அப்போதிலிருந்து 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்தன அமெரிக்கப் படைகள்.
ஆப்கானிஸ்தான் அரசியலில் பல்வேறு இனக்குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. அவர்களில் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் இனக்குழுக்களை ஒன்றிணைத்து ஆப்கன் அரசியலை மாற்றியமைக்க முயன்றது அமெரிக்கா.
ஆனால், இனக்குழுக்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னையால் இன்றுவரை அமெரிக்காவால் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை இந்த 20 ஆண்டுக்கால போரில் அமெரிக்காவால் வெல்ல முடியவில்லை என்பதே உண்மை.
இந்தநிலையில், வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
அமெரிக்கப்படைகள் வெளியேறியதால் மீண்டும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்திய தாலிபான்கள் காபூலையும் தம் வசமாக்கிவிட்டனர்.
இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி உருவாக இருக்கிறது.தற்போது ஆட்சி அதிகாரத்தை தாலிபான் அமைப்பிடம் பெரிய பொருளாதாரம் மற்றும் சமூகம் அமைப்புகளை உருவாக்குவதற்கான கொள்கைகள் இருப்பதாக தெரியவில்லை.
உயர்க்கல்வி முடித்த லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள், தீவிரவாத பணிகளுக்கு இழுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், ஆங்கில அறிவுள்ள கணிசமான நடுத்தர வகுப்பினருக்கும் தாலிபான்களின் ஆக்கிரமிப்புக் குறித்து கவலையடைந்துள்ளனர். அதிலும், குறிப்பாக பெண்களுக்கான அடிப்படை சுதந்திரம் மறுக்கப்படும் சூழல் உள்ளது.
FILE PHOTO: Afghanistan’s President Ashraf Ghani, alongside his two vice president candidates Amrullah Saleh (L) and Sarwar Danish (R), arrives to register as a candidate for the upcoming presidential election at the Afghanistan’s Independent Election Commission (IEC) in Kabul, Afghanistan January 20, 2019.REUTERS/Omar Sobhani/File Photo – RC111C385270
தற்போது ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி தலிபான்கள் வெகுவேகமாக முன்னேறி வரும் நிலையில், அந்த நாட்டிலிருந்து அதிபா் அஷ்ரஃப் கனி பாதூகாப்பான இடத்துக்கு வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சி அமைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது