ஆப்கானில் பெண்கள் அரசியலில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்விக்கு தலிபான்கள் விழுந்து விழுந்து சிரித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை விலகியதை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பின் தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது
தலிபான்கள் தனது ஆட்சியை கையில் எடுத்துள்ள நிலையில், தங்களை துன்புறுத்தக்கூடும் என பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் பெண்களுக்கான உரிமையை அளிப்போம் என தலிபான்கள் கூறியுள்ளனர். இந்தநிலையில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தலிபான்கள் சிலர் பேட்டியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் தலிபான்கள் ஆட்சியில், பெண்கள் அரசியலில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படுமா என கேள்வி எழுப்பியிருந்தார். இதனை கேட்டு விழுந்த விழுந்து சிரித்த தலிபான்கள், பத்திரிக்கையாளரின் கேள்வி தன்னை சிரிக்க வைத்ததாகவும், எனவே இந்த காட்சியை பதிவு செய்யாது உடனடியாக நிறுத்தும்படியும் கூறியுள்ளனர்.