ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய சூதாடி – நூல் அறிமுகம்

SHARE

ருலெட்  ஆட்டமென்கிற சூதாட்டத்தில் கண்ணுக்கு தெரிந்து தோற்கும் ஒருவன் ,வாழ்க்கை சூதாட்டத்தில் கண்ணுக்கு தெரியாமல் தினம் தினம் தோற்கிறான், தோற்றுக் கொண்டே இருக்கிறான். ருலெட் ஆட்டம் ரஷ்யர்களின் பெருவிருப்ப ஆட்டமாய் இருந்திருக்கிறது.

19-ம் நூற்றாண்டின் தலைச்சிறந்த உலக  எழுத்தாளர்களில் ஒருவரான ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி (1821-1881) ரஷ்ய புதின இலக்கியத்தின் முன்னோடி. மனிதனின் அகத்துரையாடல்களையும், ஆன்மிக கருத்தாக்க பிரதிபலிப்பையும் இலக்கியமாக்கியவர்.

ரஷ்ய எழுத்து மேதைகளில் இவரது எழுத்து தனித்த பாதை கொண்டது. ரஷ்ய பேரரசை விமர்சித்ததால் இவரது புத்தகங்கள் தடை செய்யப்பட்டு 1849 – ல் கைது செய்யப்பட்டார், மரண தண்டனையின் கடைசி தறுவாயில் தப்பி பிழைத்தார்.

தண்டனை குறைக்கப்பட்ட நிலையில் சைப்பீரியாவிற்கு நான்கு ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். இரண்டு வருட கட்டாய இராணுவ சேவையிலும் அமர்த்தப்பட்டார். இதற்கு பின்பு ஒரு ஊர்சுற்றியாக நாடு முழுவதும்  திரிந்தார். அக்காலக்கட்டத்தில் சூதாட்டத்தில் நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்தார்.

இந்நிலையில்  கி.பி.1866ல் எழுதப்பட்ட இவரது “சூதாடி ” என்கிற புதினம் ஒரு சூதாடியின் அகவுலகக் குறிப்புகளை கற்பனைக்கு இடமற்ற வகையில் முன் வைக்கிறது.

கதைக்களம் ஜெர்மனியின் ஹோம்பர்க் நகரில் நிகழ்கிறது. நாயகன் “அலெக்சேய் இவானவிச்” ஒரு ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியராய்  பணிபுரிகிறான். சூதாட்டத்தில் ஒரு சிறு விருப்பிருந்தாலும் பெரிய அளவில் அதை அவன் சோதித்து பார்க்கவில்லை.

இராணுவ ஜெனரலின் அண்ணன் மகள் மீது ஒரு தலைக்காதல் கொண்டுள்ளான். கடனாளியான ஜெனரலின் கீழ் வாழ்பவளுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

ஜெனரல் தனது கடன் நிவர்த்தியாக அவரது மாமியின் மரணத்தை எதிர்நோக்குகிறார். தந்தியை  எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, மாஸ்கோவிலிருந்து அந்த பெரும் மூதாட்டியே நேரில் வந்து அதிர்ச்சி தருகிறாள். சூதாட்டம் வயதான பெண்மணியையும் தனதாக்கி கொள்கிறது.

சூதாட்த்தின் முதல் வெற்றி என்பது மிகப் பெரிய கன்னி . சூதாடுபவர்களுக்கு அதன் மீது காலடி எடுத்து வைத்து விட்டோம் என்பது வெடித்து சிதறும் வரை அறிவதில்லை. மூதாட்டி தனது ஆரம்ப வெற்றிகளின் சுழலில் சிக்கிக் கொண்டு   மூட்டை நிறைய   தோல்விகளை சுமந்தபடி மாஸ்கோ திரும்புகிறாள்.

நாயகன் தனது காதலி மிஸ் பலீனாவின்  கடன் தீர மூர்க்கமாக சூதாடி  எதிர்பாரத விதமாக பெற்றிப் பெற்றாலும் காதலில் தோற்கிறான். சூதாட்ட அரங்கின் அதிகப்படியான வெளிச்சம் சூதாடியின் சுயநிழலை உணர விடாமல் செய்து விடுகிறது. தோல்விக்கு பிறகும் ஒருவனை பின் தொடர்வது உண்மையில்  அது மட்டுமே.

இராணுவ ஜெனரல், அவரடையத்  துடிக்கும் மங்கை  பத்மாசேல் பிளான்ஷ், ஆனால் அவளது விருப்பம் செல்வம் மட்டுமே. ஆரம்பக் கட்ட சூதாட்ட வெற்றியைத் தொடர்ந்து நாயகனை தனதாக்கிக் கொண்டு பயன்படுத்தி தூக்கியெறிகிறாள்,

அவனது காதலி பலீனாவைச் சுற்றி வலை பின்னும்  பிரெஞ்சு கோமான் தெ கிரியே, அவளுக்கு உதவும் ஆங்கில சீமான் ஆஸ்டலே, குறிப்பாக அந்த பெரும் மூதாட்டி என ஒவ்வொருவரையும் பற்றிய நிகழ்வுகள் அருமையான வார்ப்புகளாக வடிக்கப்பட்டுள்ளன.

150 ஆண்டுகள் கடந்த பின்பும் இவரது ரஷ்ய  இலக்கியங்கள் பிரமிப்பை ஏற்படுத்துவதோடு தற்கால சிந்தனையோடு இயங்கி வருவது வியப்பு.

அக்காலத்தில் விடுதிகளின் நிர்வாக முறை ,  சூதாட்ட மையங்களின் விதிகள், சமூக நிகழ்வுமுறைகள் என புதினம்  நம்மீது வரலாற்றின் நீர் திவலைகளைத் தெறிக்க விடுகிறது.

ரஷ்யா,பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் குடிமக்களுக்கிடையேயான சமூக உறவு நிலைகள் , மற்ற தேசத்தவர் மீதான அவர்களது சுய கருத்துகள் என குறிப்புகள் பல கிடைக்கின்றன.

2001 ஜனவரியில்  வந்த  சமீபத்திய முதல் தமிழ் மொழிபெயர்ப்பு பதிப்பான இந்நூலில்   ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் உள்ளன. பதிப்பகம்  கவனம் கொள்க. இதன் சிறப்பான மொழியாக்கத்திற்கு   நன்றிகள். வாழ்த்துகள்

எழுத்தாளர்: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

தமிழில்: ரா.கிருஷ்ணய்யா

பதிப்பகம்: வளரி வெளியீடு

முதற் பதிப்பு: ஜனவரி 2021

பக்கங்கள்: 250

விலை: ரூ. 230

– மஞ்சுநாத் (முகநூல் பதிவு)


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம் – நூல் மதிப்புரை:

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்சிகளுக்கு அப்பால்’ – நூல் மதிப்புரை.

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

உலகெங்கும் தமிழர் தடம் – நூல் மதிப்புரை

ஆண்களுக்கும் வலிக்கட்டும் – ‘சூர்ப்பனகை’ புத்தக அறிமுகம்

Pamban Mu Prasanth

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

மலையாள சூழலியல் நாவல் ‘என்மகஜெ’ – மதிப்புரை

Leave a Comment