மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3ஆவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாஅங்கு படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மூன்று போக்சோ வழக்குகள் சிவசங்கர் பாபா மீது இருந்த நிலையில் ஏற்கனவே 2 வழக்குகளில் கைதான அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது 3வது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்