சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

SHARE

நமது ‘சிற்ப இலக்கணம்’ தொடரில் இதுவரை, 24 வகையான தொழிற் கை முத்திரைகள் எவை என்று சுருக்கமாகவும், அவற்றில் முதல் 8 முத்திரைகளை விளக்கமாகவும் கண்டோம். மீதமுள்ள முத்திரைகள் குறித்து தொடர்ந்து காண்போம்

9. அலபத்ம ஹஸ்தம்.

எல்லா விரல்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து விரிந்த தாமரை மலர் போல் தோற்றம் தரும் முத்திரை. கைத்தலம் மேல்நோக்கி அமையும். இது மகிழ்ச்சியைத் தரும் பொருளில் அமையும் முத்திரை. துவாரபாலகர் படிமங்களில் நடுவுடலை அணுகியதாகவோ மேற்கரத்திலோ இருக்கும். 

உள்ளே இருப்பவரை நீங்கள் பார்த்தால், உங்களது அனைத்து துன்பங்களும் நீங்கி மலர்ந்த தாமரைபோல் முழுமையடைவீர்கள். மகிழ்ச்சி பெறுவீர்கள் என்று பொருள் கூறுமாறு துவார பாலகர் படிமத்தில் இம்முத்திரை அமையும்.

10. விஸ்மய ஹஸ்தம்.

விஸ்மயம் என்றால் ஆச்சர்யம்.. வியப்பு .. 

”அடடா.. சொல்வதற்கு வார்த்தையில்லையே..” என்று வியப்பை வெளிப்படுத்தும் முத்திரை இது.

அலபத்ம முத்திரை செங்குத்தாக அமைந்து காண்போருக்கு புறங்கை தெரிய பிடித்துக் காட்டப்படும் முத்திரையே விஸ்மய ஹஸ்தம் ஆகும். விரல்கள் எல்லாம் தனித்தனியே பிரிந்து கை மலரென விரிந்து வியப்பினை இது உணர்த்தும்.

துவாரபாலகரின் கீழ் கரங்கள் இம்முத்திரையில் இருக்கும்..

உள்ளே இருக்கும் இறைவனை நீங்கள் பார்த்தால் ஆச்சர்யப்படுவீர்கள். சிலிர்ப்பு வரும் என்ற பொருளை இது கொடுக்கும்.

11.பல்லவ ஹஸ்தம்

ஐந்து விரல்களை விரித்து நீட்டி உள்ளங்கை உள்முகமாகவும் புறங்கை வெளிமுகமாகவும் அமைய மணிக்கட்டிலிருந்து இலை போல் கீழ் நோக்கி மடிந்து தொங்கும் கையமைதி பல்லவ ஹஸ்தம் எனப்படும். இதை தளிர்க்கை என்றும் கூறுவர். 

ரிஷபாந்திகர் மற்றும் உமையொறு பாகன் மூர்த்தத்தில், ரிஷபத்தின் தலையின் மேல் அமையும் சிவனின் கரம் பல்லவ ஹஸ்த முத்திரையில் இருக்கும்.

 இராஜகோபாலன் மூர்த்தத்திலும். இம்முத்திரைக் காணலாம்.

12. நித்ரா ஹஸ்தம்

ஆசனத்தில் ஊன்றிய கையமைதி. அபய முத்திரையோடு கூடிய கையை ஆசனத்தில் படுக்கையாக வைத்து, சுட்டுவிரலும் சிறுவிரலும் ஆசனத்தை தொடாமல் சற்று மேல் நோக்கி கிளம்பி சிறிது வளைந்து இருக்கும். இது உறக்கநிலையை உணர்த்துவதால் நித்திரா ஹஸ்தம் எனப்படும்.

சோமஸ்கந்தர் படிமத்தில் உமாதேவியின் இடது கை இம்முத்திரையை அமைக்கும்..

தொடரும்…

  • மா.மாரிராஜன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

இரா.மன்னர் மன்னன்

தற்குறி – என்றால் என்ன?

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

கொரோனா சான்றிதழில் பிழையா..? திருத்தம் செய்து கொள்ள புதிய வழிமுறை இதோ

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 10

Pamban Mu Prasanth

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

சர்க்கரை ஏன் அஸ்கா என்று அழைக்கப்படுகிறது?

Admin

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள்: நாள் 3. இமான் அண்ணாச்சியின் ‘வானத்தைப் போல…’

ஜிப்ஸிக்கள் மகிழ்ச்சியாக இல்லை – மகசூல் -பயணத்தொடர் – பகுதி 11

Pamban Mu Prasanth

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

Leave a Comment