கொரோனா அலை படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் 3 வது அலை அச்சம் காரணமாக முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2வது அலையில் பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்று தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிக்கும் வகையிலும், அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையிலும் அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதேபோல் கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை, கொரோனாவால் பெற்றோர்களை இழந்து உறவினர் ஆதரவில் வளரும் குழந்தை பராமரிப்பு செலவாக ஒவ்வொரு மாதமும் ரூ.3000 உதவித்தொகையும், இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்