இந்த கட்டுமான பணிகளின் விவரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கவுஷல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் அவரது பதிலில்கூறியிருப்பதாவது.
ஒன்றிய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டுவது புதிய விஸ்டா பகுதி மறுகட்டமைப்பு ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தற்போது வரை ரூ.238 கோடியும் சென்ட்ரல் விஸ்டா பகுதியை மறுகட்டமைக்க தற்போது வரை ரூ. 63 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ரூ.971 கோடி வரை ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சென்ட்ரல் விஸ்டா பகுதியின் மறுகட்டமைப்பிற்கு ரூ.608 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்