இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த்” எனும் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான் சந்த் பெயரிட வேண்டுமென்று இந்தியா முழுவதிலிமிருந்து பல கோரிக்கைகள் எனக்கு வந்தது. அவர்கள் உணர்வை மதித்து கேல் ரத்னா விருது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும். ஜெய் ஹிந்த்“ என்று பதிவிட்டுள்ளார்.
1991ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு “ராஜிவ் காந்தி கேல் ரத்னா” வழங்கப்பட்டு வருகிறது. செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், ரோகித் சர்மா , தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட 45 வீரர்களுக்கு இதுவரை இவ்விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்