டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

SHARE

ஐபிஎல் டி20 போட்டியின் 7ஆவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்து தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.

மும்பை:

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் டி20 லீக் போட்டியின் 7ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இதுதான் இந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்ற முதல் வெற்றி.

இந்த ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பவுளலிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் தன்னுடைய பவர் பிளே சுற்றிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மட்டுமே நன்றாக ஆடி 31 பந்துகளுக்கு 51 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்களுக்கு 147 ரன்கள் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ். 

அடுத்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் போலவே தன்னுடைய பவர் பிளே ஆட்டத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஆட்டத்தின் 4 வது ஓவரில் வந்த மில்லர் நிதானமாக ஆடி நல்ல ரன்களை கொடுத்தார். கடைசி 4 ஓவரில் தான் மில்லர் மற்றும் மோரிஸ் சிக்ஸர்களை அடித்து சிறப்பான ஆட்டத்தை கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வெற்றி தந்தனர். இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு மூன்று பேர்தான் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களைப் பற்ரி சற்று விரிவாகப் பார்ப்போம்.

உனத்கட் 

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆட்டத்தில் பவர்பிளேவிலேயே பிரித்வி ஷா, தவன், ரஹானேன்னு மிக முக்கியமான மூன்று விக்கெட்டுகளை எடுத்தார் ராஜஸ்தான் ராயல்ச் அணியின் பந்து வீச்சாளரான உனத்கட்.  இதற்காகவே இவர் ஆட்டநாயகன் ஆனார். இந்த விக்கெட்டுகளிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணி சோர்ந்து விட்டது. வெகு நாட்களுக்கு பிறகு சிறப்பான ஃபெளலிங். இவர் தனது பந்து வீச்சில் ஸ்லோபால், ஸ்விங், கட்டர் என பல பாணிகளைப் பயன்படுத்தி டெல்லி அணியை திக்கு முக்காட வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங்கின் போது கூட ஆட்டத்தின் கடைசி ஓவரில் வோக்ஸின் பந்தில் இவர் சிக்ஸர் அடித்தது அணியின் சுமையைக் குறைத்தார். 

மில்லர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக வந்தவர் டேவிட் மில்லர். ஆட்டத்தின் 4வது ஓவரில் வந்த மில்லர், அவருக்கு பிறகு பல விக்கெட்டுகள் வீழந்தும், மிகவும் நிதானமாக ஆடி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை கொடுத்தார். ஆட்டத்தில் இவர்தான் அதிகப்படியான ரன்களை எடுத்தார். அதுவும் ஆவேஷ் கான் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளும், ஸ்டாய்னிஸ் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளையும் தெறிக்க விட்டார். மீண்டும் ஆவேஷ் கான் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களும் பறந்தன.  ஆட்டத்தின் 35ஆவது ஓவரில் முதன்முரையாக சிக்ஸர் அடிக்க ஆரம்பித்தவரும் இவர்தான். அதுவரை ஒரு சிக்ஸர் கூட இல்லாமல் ஆட்டம் களையிழந்து கிடந்தது. 

மோரிஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆட்டத்தில் 15வது ஓவரில் வந்தவர் மோரிஸ். கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், ரபாடா பந்து வீச்சில் 2 சிக்ஸர்கள் அடித்து 15 ரன்களை எடுத்தார் மோரிஸ். கடைசி ஓவரில், 6 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், டாம் கரனின் பந்து வீச்சில், சூப்பரான 2 சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் மோரிஸ். 

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

Admin

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

ஐபிஎல் தொடரின் ஃபார்முலாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்…

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியா…ரூ. 4 கோடி பரிசு அறிவித்த ஹரியானா அரசு

Admin

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

Leave a Comment