அரசியல்வாதிகள் ஆபாச படம் பாக்குறாங்க.. கைதான ஷில்பா ஷெட்டி கணவர் சர்ச்சை ட்வீட்

SHARE

ஆபாசப் படங்களைத் தயாரித்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பதிவிட்டுள்ள பழைய ட்வீட் வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் மும்பை போலீசார் தங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் ஆண் மற்றும் பெண் மாடல்கள், ஒன்பது தயாரிப்பாளர்களை மும்பை போலீஸ் கைது செய்திருந்தது.

இந்த ஒன்பது நபர்களில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர் ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனைச் சந்தா மூலம் இயங்கும் மொபைல் செயலிகளில் வெளியிட்டு வந்ததாக போலீசார் குற்றஞ்சாட்டினர். அதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு ஆபாசப் படங்கள் குறித்தும், பாலியல் தொழில் குறித்தும் ராஜ் குந்த்ரா பதிவிட்ட ட்வீட்கள் தற்போது வைரலாகிவருகின்றன.

ராஜ் குந்த்ரா தனது பழைய ட்விட்டர் பதிவில் இந்தியாவில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். அரசியல்வாதிகள் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர்.

ஆபாச நட்சத்திரங்கள் நடிகர்களாகி வருகிறார்கள் என ட்வீட் செய்துள்ளார். தனது மற்றொரு ட்வீட்டர் பதிவில் கேமரா முன் ஆபாசப் படங்களில் நடிக்க ஒருவருக்குப் பணம் கொடுத்தால் அது சட்டப்படி சரி. இதற்கும் பாலியல் தொழிலுக்கும் என்ன வித்தியாசம்” என ட்வீட் செய்துள்ளார்தற்போது இந்த இரண்டு ட்வீட்களும் இப்போது வைரலாகிவருகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோயில் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! வைரல் வீடியோ

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

லடாக் பாரம்பரிய உடையில் மனைவியுடன் அமீர் கான் நடனம்.. வைரல் வீடியோ

Admin

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

முதல்வரையே டேக் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மீரா மிதுன் ட்வீட்

Admin

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் !! நலமுடன் இருப்பதாக விளக்கம்!!

Admin

மிரட்டலாக வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் லுக்… இயக்குனர் யார் தெரியுமா..?

Admin

பரிதாபமாக காட்சியளிக்கும் சிம்பு… கௌதம் படத்திற்காக எடை குறைந்து அசத்தல்

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

Leave a Comment