வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

SHARE

சவுதி அரேபியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை பொதுமக்கள்  காண்பித்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தொற்றைக் குறைக்கவும் ஏப்ரல் மாதம் முதலே கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்வதில் சவுதி அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் சவுதியில் இதுவரை 1.1 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை கட்டாயமாக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தைக் காட்டினால்தான் அரசு அலுவலங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இல்லாதவர்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கச்சேரி மேடையான சலூன் கடை : வைரலாகும் வீடியோ!

Admin

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

டெல்டா கொரோனா பெரும் சவால் – அமெரிக்க மருத்துவ நிபுணர் தகவல்

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்: புதுடெல்லியில் கண்டுபிடிப்பு!

Admin

கொரோனா வந்தாலும் மகிழ்ச்சி போகாது: 95 வயது பாட்டியின் வைரல் நடனம்!.

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

Admin

தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கம்!

Admin

Leave a Comment