சவுதி அரேபியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை பொதுமக்கள் காண்பித்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தொற்றைக் குறைக்கவும் ஏப்ரல் மாதம் முதலே கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்வதில் சவுதி அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் சவுதியில் இதுவரை 1.1 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை கட்டாயமாக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தைக் காட்டினால்தான் அரசு அலுவலங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இல்லாதவர்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கெளசல்யா அருண்