நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஒரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தி வந்தாலும், மறுபுறம் மாநில அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.
மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றும்போது முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வாரங்களாகவே மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தொடர்பாக தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினார்.
– மூவேந்தன்