நமது நிருபர்
15 மாதங்களாக கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்த பிரதமர் மோடி இம்மாதம் மீண்டும் பயணம் செய்கிறார்.
இந்தியப் பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டுவரை பல்வேறு உலக நாடுகளுக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு வந்தார். ஆனால் 2019ல் தலையெடுத்த கொரோனா அச்சம் காரணமாக அவரது அரசு முறைப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
கடந்த 15 மாதங்களாக எந்த வெளிநாட்டிற்கும் இந்தியப் பிரதமர் மோடி பயணங்களை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி விரைவில் மீண்டும் வெளிநாட்டுப் பயணங்களைத் தொடங்க உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவின் அண்டைநாடும், 1971ஆம் ஆண்டில் இந்தியாவின் தலையீட்டால் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து உருவான நாடுமான வங்க தேசத்தின் 71ஆவது சுதந்திர தின விழா மார்ச் 26 அன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கவே அதே நாளில் பிரதமர் மோடி15 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வங்க தேசத்தின் 71ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ள இந்தியப் பிரதமர் மோடி, வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடனான பேச்சுக்குப் பின்னர், வங்க தேசத்தின் தாஹாவுக்கும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி-க்கும் இடையிலான ரயில் சேவையையும் தொடங்கி வைக்க உள்ளார்.