யூடியூப் சேனல் மூலமாகஆபாசமாக பேசிய மதன் போலீசாரல் நேற்று கைது செய்யப்பட்டர்.அப்போது செய்தியாளர்கள் மதனை புகைப்படம் எடுத்த போது நான் என்ன பிரதமரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்களிடம் ஆபாசமாக பேசி பணமோசடியில் ஈடுபட்ட யூ-டியூபர் மதன் மீது புகார் எழுந்ததால் போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மதன் தருமபுரியில் அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்ததார். இதனை கண்டறிந்த தனிப்படை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
யூ-டியூபர் மதனிடமிருந்து 2 சொகுசு கார்கள், 3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர்.
இதனைத் தொடர்ந்து, மதனை தருமபுரியில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.
அப்போது,செய்தியாளர்கள் மதனை புகைப்படம் எடுத்தபோது,நான் என்ன பிரதமரா?”,என்று மதன் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த போலீசார், “நீ ஒரு குற்றவாளி”,என்று கூறி விசாரணைக்காக காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.
பின்னர், அங்கு மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மதனை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், பின்பு காவலில் எடுத்து மேற்கொண்டு விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.