காவலர்கள் முறையான வாரண்ட் இல்லாமல் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கக் கூடாது டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிப்பது தொடர்பாக காவலர் மற்றும் நடத்துனர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸை தொடர்ந்து, தற்போது காவலர்கள் முறையான வாரண்ட் இல்லாமல் தங்கள் சொந்த வேலைக்காக இலவசமாக பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்