பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக அதிகரித்துள்ளது.
உலக தலைவர்களில் டிவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களில் பட்டியலில் இந்திய பிரதமர் மோடியும் ஒருவர். வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அவரது கருத்துகளையும், மக்களுக்கான தகவல்களையும் அவர் சமூகவலைத்தளத்தின் மூலமாக தெரிவித்து வருகிறார்.
குஜராத் முதல்வராக இருந்த போது கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முதலாக டுவிட்டரில் இணைந்த அவரை 2010ல் ஒரு லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். பின்னர் 2011ல் 4 லட்சம் பேராக உயர்ந்தது. இப்படியாக உயர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் 6 கோடியை கடந்த பாலோயர்கள் எண்ணிக்கை தற்போது 7 கோடியை எட்டியுள்ளது.
உலக அளவில் அதிக டுவிட்டர் பாலோயர்களை கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் மோடிக்கு அடுத்த இடத்தில் 4.5 கோடி பாலோயர்களுடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளார். பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்த நிலையில், அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பலரும் #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.