மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்! – தாய்லாந்தில் சம்பவம்

SHARE

அரசு விழாவில் முகக் கவசம் போட மறந்த பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு தாய்லாந்தில் நடந்துள்ளது.

பாங்காக், தாய்லாந்து.

உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே தாய்லாந்திலும் முகக் கவசம் அணியாத பொது மக்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 20 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் 47 ஆயிரம்) வரை அபராதங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முகக் கவசம் அணியாமல், தலைநகர் பாங்காக்கில் ஒரு அரசு விழாவில் பங்கேற்க, அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பொதுமக்கள் ”எங்களுக்கு ஒரு நியாயம், பிரதமருக்கு ஒரு நியாமா?” என பதிவிட்டு கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாங்காங் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் பிரதமருக்கு 6,000 பாட் (இந்திய மதிப்பில் 14,000 ரூபாய்) அபராதம் விதித்துள்ளார்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொழுதுபோக்குக்காக பறப்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது :கடுப்பான அமெரிக்கா!

Admin

ஏன் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்கலை தெரியுமா? அமெரிக்கா விளக்கம்!

Admin

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களும் பணியைத் தொடங்கலாம்: தமிழக அரசு

தாலிபான்கள் ஆட்டம் ஆரம்பம்: விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை

Admin

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழர்… ராஜகோபால் ஈச்சம்பாடி எனும் நான்

Admin

மீண்டும் கொரோனா..தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரிட்டன் பிரதமர்

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

Admin

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

26 ஆண்டுகால புகைக்கும் பழக்கம்… மீண்டது எப்படி? – எழுத்தாளரின் அனுபவப் பதிவு…

Leave a Comment