கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை என இது குறித்து விளக்கிய தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
கரும்பூஞ்சைத் தொற்று குறித்து ஊடகங்களிடம் பேசிய தமிழக சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,
இது புதுவாக உருவான தொற்று பாதிப்பு அல்ல எனவும் தமிழகத்தில் 9 பேர் இதுவரை கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கரும்பூஞ்சைத் தொற்றால் தமிழகத்தில் யாரும் இறப்பைச் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கருப்பு பூஞ்சைகள் குறித்த வாட்ஸ் ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நோய் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என கூறியுள்ள அவர் கரும்பூஞ்சை பாதிப்பை கண்டு ஆராய குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், கரும்பூஞ்சைத் தொற்று ’தகவல் அளிக்கப்பட வேண்டிய நோய்’யாக அறிவிக்க பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
- கெளசல்யா அருண்