பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

SHARE

பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் இந்திய அரசியலில் பேசு பொருளான கதை நாம் அறிந்ததே ,இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், அனிருதா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தமனுவில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் மூத்த அதிகாரிகளைச் சந்திப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. ஆதலால், மனுதாரர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 2-வது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம் தேவை எனக் கோரப்பட்டது.

இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமோ கோலி ஆகியோர் முன்னிலையில் பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஒரு மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ‘ பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விரிவான பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. மத்தியஅரசு சார்பில் எதையும் மறைக்க விரும்பவில்லை. அதனால்தான் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து, குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்.

குறிப்பிட்ட மென்பொருள் பயன்படுத்தி மத்திய அ ரசு கண்காணிப்பில் ஈடுபட்டதா இல்லையா என்று வெளிப்படையாக விவாதிக்க அரசு விரும்பவில்லை. இந்த தகவல்கள் நாட்டின் நலனுக்கும் உகந்ததாக இருக்காது. ஆனால், வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

புதுச்சேரியில் சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ தேர்வு

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

Leave a Comment