தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று காலை முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், புதிய ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் 27 மாவட்டங்களில் அதிகாலையிலேயே தேநீர் கடைகள் திறக்கப்பட்டன.
அதேபோல் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
மேலும் சலூன் கடைகள், டாஸ்மாக் கடைகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் என்பது உள்ளிட்ட பலவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வருகிறது.
ஆனால் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகளே வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்