ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசுக்கு முகமது ஹசன் தலைமையேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஆப்கன் ராணுவ படைக்கு உதவி வந்த அமெரிக்க படை அந்நாட்டை விட்டு வெளியேறியது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்த தாலிபான்கள், ஆட்சியை கைப்பற்றின.
ஆப்கன் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அங்கு புதிய அரசை அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் தலைவராக முகமது ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாலிபான் அரசின் துணை தலைவராக அப்துல் கனி பரதர் செயல்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் புதிய அரசாங்கத்தில் ஷரியா சட்டம் நிலைநாட்டப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷரியா சட்டம் என்பது இல்லாமின் சட்ட அமைப்பு ஆகும்.