தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் நீட் தேர்வு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வுக்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டது என்றும், அதனுடைய தொடர்ச்சியாக இப்போது பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நீட் தேர்வுக்கான பயிற்சி தற்போது தொடங்கப்பட்டது போன்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார் என்று குற்றம்சாட்டிய மா. சுப்பிரமணியன், நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வு என்பது தற்போதுவரை நடைமுறையில் உள்ளது. அதனை ரத்துசெய்ய திமுக முயற்சித்து வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்