வீணான இஷான் கிஷனின் சாதனை. வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்…

SHARE

ஐபிஎல்லில் நேற்று இரண்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடந்தன. மும்பை இண்டியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனும்  மோதின. 

இதில் மும்பை அணி வென்றால் ஃபிளே ஆஃப்பிற்கு செல்ல வாய்ப்பு இருந்தது. அதுவும் அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும், அதாவது மும்பை அணி அதிக ரன்கள் எடுத்து எதிரணியை சொற்ப ரன்களில் வீழ்த்த வேண்டும் என்பதே மும்பையின் முன்னிருந்த ஒரே வாய்ப்பு. அது கடினமும் கூட. 

நேற்று நடந்த போட்டில் மும்பை அணி பிளே ஆஃப்பிற்கு செல்லவில்லை என்றாலும், மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் இஷான் கிஷனின் சாதனைதான். 

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, ஆரம்பத்தில் இருந்தே பந்துகளை அடித்து நொறுக்கினார்கள். அதிலும் தொடக்க ஆட்டக்காரராக வந்த இஷான் கிஷன் ஃபெளலர்களின் பந்துகளை தூக்கி அடித்து தெறிக்க விட்டார். வெறும் 16 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை எட்டினார் இஷான் கிஷன். 

இதுவரை மும்பை அணியின் வீரர் ஒருவர் குறைந்த பந்துகளில் அடித்த முதல் அரை சதம் இது. இதற்கு முன் இருந்தது 17 பந்துகளில் அரை சதம் எடுத்தது, அந்த சாதனைக்கு சொந்தகாரரும் இவர் தான், இவரும் பொலார்ட்டும் தான் 17 பந்துகளில் அரை சதம் எடுத்து சாதனையை பகிர்ந்து இருந்தார்கள். இப்போது அந்த சாதனையை தனக்கு மட்டுமே உரியதாக இஷான் கிஷன் மாற்றி இருக்கிறார்.

அடித்து நொறுக்கிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து மாலிக் பந்தில் அவுட்டானார்.

இந்த ஆட்டத்தில் மும்பை வென்றாலும், அதிக ரன்ரேட் பெறாததால் பிளேஆஃப் சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெறவில்லை.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நம்ம தல தோனியா இது.. வித்தியாசமான தோற்றத்தில் கலக்கும் தோனி… வைரலாகும் புரோமோ!

Admin

மறைந்த இசை கலைஞருக்காக சிறப்பு கூகுள் டூடுள் வெளியீடு..!!

Admin

ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன “இல்லாத” சிற்பம்… வடிவேலு பாணியில் நடைபெற்ற சம்பவம்…

Admin

அரையிறுதியில் வீழ்ந்த இந்திய ஹாக்கி அணி… சோகத்தில் ரசிகர்கள்

Admin

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

IND VS SL :முதல் ஒருநாள் போட்டி .. இந்திய அணி வெற்றி!

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

கப்பு முக்கியம் பிகிலே ..டோக்கியோவிற்கு புறப்பட்ட இந்திய வீரர்களை வாழ்த்தி அனுப்பிய இந்தியா!

Admin

இந்திய அணியை வழிநடத்த அவரே சிறந்தவர் : தோனியை புகழ்ந்த பிசிசிஐ

Admin

Leave a Comment