நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
ஆபாச படம் எடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது நண்பர்களை மும்பை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர் இந்த நிலையில்ராஜ் குந்த்ரா மற்றும் அவரது தொழில் கூட்டாளியான ரியான் தார்பேவும் தங்களை கைது செய்யும் முன் குற்றவியல் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பாததால் தங்களின் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விளக்கமளித்த மும்பை காவல்துறையினர் ராஜ் குந்தாராவினை கைது செய்வதற்கு முன்பு தாங்கள் நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள மனுதாரர்கள் தரப்பு தவறி விட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, ராஜ் குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளி ரியான் தார்ப் ஆகியோர் மீதான நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருப்பதாக கூறி அவர்களது மனுவை நிராகரித்தார்.
விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!