சட்டமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இறகுப்பந்து விளையாட்டு கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி அமைந்துள்ளது. அங்கு ரூ. 4.29 கோடி மதிப்பில் இறகுப்பந்து விளையாட்டுக் கூடம் உள்ளிட்டப்வை அமைக்கப்பட்டுள்ளன.
இறகுப்பந்து விளையாட்டுக் கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மைதானத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் முதல்வர் ஸ்டாலின் இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்