தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி விமானநிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு பிரதிநிதி விஜயன் மற்றும் திமுக எம்பிக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனை தொடர்ந்து, சாணக்கியாபுரத்தில் இருக்கக் கூடிய தமிழ்நாடு பொதிகை இல்லத்தில், காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடி-முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பானது பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பானது 25நிமிடங்கள் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போதுதமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
இதில் நீட்தேர்வு ரத்து, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, ஜிஎஸ்டி நிலுவை தொகையை பற்றி வலியுறுத்தியதாகவும், 7 பேர் விடுதலை, மதுரை எய்ம்ஸ் பணிகள்,மேகதாது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது