”எதிர்பாராத விபத்து..!”. மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 3.

SHARE

பேருந்துக்குப் பணம் வேண்டும் எனக் கேட்டு நின்று கொண்டிருந்த பெண்ணை பார்த்ததும் புகழேந்திக்கு கோபம் வந்தது…

” ஏம்மா… மனுசங்க என்ன மனநிலையில இருக்காங்கன்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டிங்களா..? ” என்றான் கோபமாக…

” சார்… கொஞ்சம் உதவி பண்ணுங்க சார்… நான் என் குழந்தையை தேடிப் போய்கிட்டு இருக்கேன்… சா..ர்… ” என்று அந்த பெண் சொல்லி கூட முடிக்கவில்லை… அதற்குள்ளாக அவளை இடைமறித்து…

” கடுப்ப கிளப்பாம போம்மா அங்கிட்டு… ஏற்கனவே வேதனையில இருக்கேன். நீ வேற வந்து டென்ஷன் ஏத்தாத… அசிங்கமா திட்டிருவேன்… “

” சார் நான் பொய் சொல்லல சார்… கொஞ்சம் உதவி செய்ங்க சார்… “

” தோ… பாரு… உன்ன மாதிரி ஆயிரம் பேரப் பாத்தாச்சு… இப்படி ஏமாத்தி காசு புடுங்கறதெல்லாம், வேற யாருகிட்டயாச்சும் வச்சுக்க… உடம்பு நல்லாத்தான இருக்கு… இப்படி எச்சத்தனமா பேசி பிச்ச எடுக்கறதுக்கு பதிலா, வேற எதாவது தொழில் பண்ணு போ… ” என வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை கொட்டினான்.

உண்மையில் புகழேந்தி இப்படி பேசும் ரகம் இல்லை. உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லவே மாட்டான். இந்நேரம் அவன் பழைய புகழேந்தியாய் இருந்திருந்தால் அந்த பெண்மணியிடம் நல்லவிதமாக பேசி அவள் கேட்கும் உதவிகளை கண்டிப்பாக செய்திருப்பான். அப்பேர்ப்பட்ட புகழேந்தி இன்று வாழ்க்கையை வெறுத்து, வாழவே லாயக்கு இல்லை என்ற மனநிலையில் நிற்கதியாக நடுரோட்டில் நின்று கொண்டிருக்கும் வேளையில் அந்த பெண் உதவி கேட்டதை அவனை அறியாமலேயே மறுதலித்தான்.

இன்னும் அவன்பால் கொண்ட நம்பிக்கையில்…

அவன் உதவி செய்வான் என்ற நம்பிக்கையில்…

அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள், அவள்..

அவளுக்குத் தெரியுமா என்ன ? புகழேந்தி இழக்கக் கூடாததை இழந்தவன். அதனால் அவனுடைய ராதிகா அவனை விட்டு பிரிந்து சென்று விட்டாள். எனவே அவன் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளத் தயாராக இருக்கிறான் என்று…

அவளுக்குத் தேவை தன் குழந்தையைப் பார்க்க வேண்டும். ஊருக்கு போக வேண்டும். அதற்குக் காசு வேண்டும். யார் யாரிடமோ கெஞ்சிக் கூத்தாடியும் இம்மியளவும் பயன் இல்லை. தன்னுடைய கடைசி நம்பிக்கை இந்த ஒருவன்தான் என்று அவனையே எதிர்பார்த்து கைகளைக் கூப்பியபடி நின்று கொண்டிருந்தாள்.

அவ்வளவு திட்டியும் போகாமல் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்ததும் புகழேந்திக்கு பரிதாபம் வரவில்லை கோபம்தான் வந்தது..

கண்ணீர் மல்க.. அவனிடம் கெஞ்சினாள் அவள்..

” சார்… நான் சாப்பிட்டு நாலு நாள் ஆகுது… சுத்தமா கண்ணே தெரியலை… எனக்கு ஊருக்கு போயாக வேண்டிய கட்டாயம் சார்… என் குழந்தைய நான் சாகுறதுக்குல்ல பார்க்கணும்… கொஞ்சம் தயவு செய்து உதவி செய்ங்க.. சார் “

” இதோ பாரு.. நீ என்ன ட்ராமா ஆடுனாலும் காசு தரமுடியாது… ஒழுங்கா போய்டு… மரியாத இல்லாம பேச வைக்காத… ரோட்ல எவ்ளோ பேரு போய்ட்டு இருக்காங்க… அவங்க கிட்ட போய் பிச்ச எடு… நான்தான் கிடைச்சனா… போடி… ” என்று அவளை விரட்டினான்.

இதற்கு மேல் அவனிடம் பேசி ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்த அவள் அவனிடம் இருந்து கொஞ்சம் நகர ஆரம்பித்தாள்…

அவள் அந்த இடத்தை விட்டு நகரவும், அவன் கையிலிருந்த சிகரெட் கரைந்து முடிக்கவும் சரியாக இருந்தது.

அவள் அவனை விட்டு நகர்ந்து செல்வதையே பார்த்துவிட்டு அப்படியே கடைக்காரனிடம் திரும்பினான்.

” இன்னொரு சிகரெட் குடு “

கடைக்கார இளைஞனும் பவ்யமாக ஒரு சிகரெட்டை நீட்டினான்.

சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டே கடைக்காரனிடம் பேச ஆரம்பித்தான்.

” நிம்மதியா ஒரு சிகரெட் கூட அடிக்க முடியலை.. என்ன வாழ்க்கையோ… ” என பேசிய படி சிகரெட்டின் புகையை சுவாசிக்க ஆரம்பித்தான்.

புகழேந்தி சொல்வதை கடைக்கார இளைஞன் கேட்டமாதிரியும், கேட்காத மாதிரியும் வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

முதல் இழுவையில் புகையை நன்றாக சுவாசித்து வெளியிட்டு மறுபடியும் கடற்கரையை பார்த்துக் கொண்டிருந்தான்…
இரண்டாவது இழுவை… இழுக்க எத்தனித்த அதே வினாடி வீலென்ற அலறல் சத்தம் அவனை நிலை குலையச் செய்தது.

அவன் மட்டுமல்ல… அங்கிருந்த மக்கள் கூட்டம் மொத்தமும் அந்த அலறல் சத்தத்தை கேட்டிருக்கக் கூடும்..

சத்தம் வந்த திசையைத் தேடினான். அவனுக்கு மிக அருகில் இருந்த சாலையில் கூட்டம் கூடியிருந்தது…

அந்த கூட்டத்தை நோக்கி ஓடினான்…

கூட்டத்தை விலக்கிவிட்டு யாருக்கு என்ன நேர்ந்ததோ என்ற எதிர்பார்ப்பிலும், பதட்டத்திலும் எட்டிப் பார்த்தான்…

பார்த்த வினாடியே அவனுடைய இதயம் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தது.

சற்று நேரத்திற்கு முன்பு அவனிடம் ஊருக்குச் செல்வதற்குப் பணம் கேட்டு நின்று கொண்டிருந்த அதே பெண் தான் அங்கு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தாள்…

அவளைப் பார்த்தபடியே அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தான்…

“என்னாச்சுங்க.. எப்படி… இப்பதான பார்த்தேன்…” என பதட்டத்தில் வார்த்தைகளை மென்று துப்பிக் கொண்டிருந்தான்.

” இங்க உள்ள தறுதலைங்க ரேஸ் விடுவானுங்க.. அடிக்கடி யாரு தாலியவாவது அறுப்பானுங்க… இன்னைக்கு இந்தம்மாவ முடிச்சு விட்டுட்டானுங்க… ” என சாதாரணமாக ஒருவர் சொன்னார்.

” என்ன சார், சர்வ சாதாரணமா சொல்றீங்க.. அவனுங்களைப் பிடிச்சாங்களா இல்லையா.. ” என்றான் பதட்டம் குறையாமல்…

” யோவ் அவனுங்க இன்னா… இஸ்பீடுல போய்னு இருக்கானுங்க.. எங்க போய் அவனுங்களை புடிக்கிறது.. நாசமா போறவனுங்க… போய்டானுங்க அடிச்சு போட்டுனு… “

புகழேந்தி அந்த பெண்மணியைப் பார்த்தான்…

இன்னும் அவள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி துடித்துக் கொண்டிருந்தாள்…

” ஆம்புலன்ஸ்க்கு யாராவது தகவல் கொடுத்துருகிங்களா… சார்… “

” கொடுத்தாச்சு… சார்… வந்துட்டு இருக்குது.. ” என்ற வார்த்தைகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன…

இது எதுவுமே புகழேந்தியின் காதில் விழவில்லை… அவள் துடித்துக் கொண்டிருந்ததை மட்டுமே அவன் பார்த்துக் கொண்டிருந்தான்…
அவளது கண்கள் அவனை மட்டுமே பார்ப்பது போலிருந்தது… அவை அவனிடம் கேட்பது என்னவென்று புரியாமல் குழம்பினான்.
அவன் குற்ற உணர்ச்சியால் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்…
தூரத்தில் அவர்களை நோக்கி ஒரு ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது..

  • தொடரும்…

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் 27. ‘கமலின் முதல் பஞ்சாயத்து’

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 2

Pamban Mu Prasanth

பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 7

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

இரா.மன்னர் மன்னன்

”மரணத்துக்கு முந்தைய அமைதி!” மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 1.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment