சீல் வைக்கப்பட்ட மதுரை ஆதீனம் அறை… சொந்தம் கொண்டாடிய நித்யானந்தா

SHARE

மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக சித்தரித்து தன்னை நித்யானந்தா வெளியிட்ட அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போதைய மதுரை ஆதீனத்தின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் (அருணகிரி) ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.

இவர் சுவாச கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டி முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டிருந்தார். இது கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீன மடத்தில் 292 வது பீடாதிபதி அருணகிரிநாதர் பயன்படுத்திய அறையை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்ற காரணத்திற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறையில் மடத்தின் சொத்து விபரங்கள் அடங்கிய பத்திரங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் உள்ள நிலையில் அதனை தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

நம்மைத் தேடிவரும் உயர்ந்த மனிதர்கள்: வாரியார் வாக்கு

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

கர்ணன் – என்ற பெயர் எப்படி வந்தது?

இராமாயணத்தின் தியாகக் காண்டம் தெரியுமா?

Admin

நோய், பிணி – இரண்டு சொற்களுக்கும் என்ன வேறுபாடு?

உணவு எடுத்துக் கொள்ளுதலின் 4 வகைகள்: கீதை சொல்வது என்ன?

Admin

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

Leave a Comment