ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

SHARE

அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் நாள்.  ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் விசேஷமான நாட்கள்தான். அதில் ஆடி அமாவாசை முன்னோர்களைக் கொண்டாடக்கூடிய நாள். இந்த வருடம், வரும் 08.08.2021 அன்று ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. சரியாக 07.08.2021 இரவு 7.39 மணிக்குத் தொடங்கி 08.08.2021 இரவு 7.56 மணி வரைக்கும் அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. 

ஏன் ஆடி அமாவாசையன்று வழிபட வேண்டும்?:

பொதுவாக வரும் அமாவாசைகளில், நம் முன்னோர்களை வழிபடுவது இருந்தாலும், ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையில் நம் முன்னோர்களை வழிபடுவது மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

அமாவாசையில் முக்கியமான மூன்று அமாவாசைகள் உள்ளன. அவை:

1.ஆடி அமாவாசை

2.புரட்டாசி அமாவாசை

3.தை அமாவாசை

ஆடி அமாவாசை மேலோகத்தில் இருந்து நம்மை காண பூலோகத்திற்கு முன்னோர்கள் வருவதாக நம்பப்படும் நாள். இந்த நாளில் அவர்களை தர்ப்பணம் கொடுத்து வரவேற்பதே ஆடி அமாவாசையின் சிறப்பு.

புரட்டாசி அமாவாசை அல்லது மஹாளய அமாவாசையில் முன்னோர்கள் அனைவரும் ஒன்று கூடுவர் என்பது நம்பிக்கை, இதுவே புரட்டாசி அமாவாசையின் சிறப்பு.

தை அமாவாசையில் நம் முன்னோர்கள் திரும்ப விண்ணுலகிற்குச் செல்கின்றனர். அன்று அவர்களை மனதார வழிபட்டு மகிழ்ச்சியுடன் அனுப்பிவைக்க வேண்டும். 

ஆடி அமாவாசை வழிபாட்டால் ஏற்படும் பலன்கள்:

இந்த நன்னாளில் நம் முன்னோர்களை வழிபடுவதால், அவர்களது மனம் குளிர்ந்து, மகிழ்ச்சி அடைவார்கள். இந்த நாளில் அவர்களை வழிபட்டு நாம் இறைவனிடம் என்ன வேண்டினாலும் அது சுபமாக முடியும் என்பதுதான் இந்த நாளின் சிறப்பு. நாம் முன்னோர்களை மகிழ்வித்ததால், அவர்கள் நமக்காக இறைவனிடத்தில் நமக்கு வேண்டிய அனைத்தும் கொடுக்க அருள் புரிய செய்வார் என்பது நம்பிக்கை.  

ஆடி  அமாவாசையில் கொடுக்ககூடிய பொதுவான தர்ப்பணம்தான் காருண்ய தர்ப்பணம். இது ஒரு நபர் இறந்த எந்த ஒரு உயிரினங்களுக்காகவும் கொடுக்கக்கூடியது. 

தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள்:

ஒரு ஆண், இறந்து போன தன்னுடைய தாய், தந்தை, மகன், மனைவி, தாத்தா, பாட்டி போன்ற அனைத்து உறவுகளுக்காகவும் கொடுக்கலாம்.

ஒரு பெண், தன்னுடைய இறந்த கணவருக்கு கொடுக்கலாம். இது தவிர சுமங்கலி பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. பொதுவாக பெண்கள் முன்னோர்களை வழிபட்டு தீப ஆராதனை மற்றும் படையல் படைத்து, அந்த படையலை சாப்பிட்டால் போதுமானதாகும்.   

எப்படி தர்ப்பணம் செய்வது?:

இந்த கொரோனா காலத்தில் வீட்டிலேயே தர்ப்பணம் கொடுக்கக்கூடியவர்கள், அன்று விரதமிருந்து, எள்ளும் தண்ணியும் இறைத்து, அதாவது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு நடுவில் விட வேண்டும், தங்களுக்கு தெரிந்த இறந்தவர்களின் பெயர்களை கூறி சூரியனை வணங்க வேண்டும். அதுவே போதுமானது. 


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்.. மதிப்பெண்களில் திருப்தி இல்லையெனில் தேர்வு எழுதலாம்

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

பப்ஜி மதன் மீது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சைபர் க்ரைம்!

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

Leave a Comment