தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டவை, தடை செய்யப்பட்டவை குறித்து காண்போம்.
இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா இரண்டாம் அலையின் பரவல் குறைந்து வருவதால் சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கில் 3 விதத்தில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி ஒரே மாதிரியான தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில வாரமாக அதிகளவு கொரோனா தொற்றுக் காணப்பட்ட கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக் குறைந்துள்ளதால் விரைவில் தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அளித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தலாம்,
ஆனால் இதில் பங்கேற்கும் அரங்கு உரிமையாளர், பணியாளர்கள், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இனி இ -பாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது.
திரையரங்குகள் நீச்சல் குளங்களுக்கு தடை தொடரும், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்,
உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து துணிக்கடைகள், நகைக்கடைகள் காற்றோட்ட வசதியுடன் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
வணிக வளாகங்கள் அனைத்தும் காலை 9 மணி முதல் காலை 8 மணி வரை செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் அரசு நெறிமுறைகளின்படி மக்கள் செயல்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டவை:
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்குத் தடை நீடிக்கிறது.
உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டவை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை .
அரசியல், சார்ந்த கூட்டங்கள் கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.