மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் இரண்டே முக்கால் லட்சம் பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தையொட்டி பதிவாகி வருகிறது.
டெல்டா பிளஸ் வைரஸ் முதன் முதலில் மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டது. அங்கு மட்டும் டெல்டா பிளஸ் வைரசின் 21 நபர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,844 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகளை தற்காலிகமாக நிறுத்த அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவெடுத்துள்ளார்.
கொரோனாவின் 3வது அலையிலிருந்து மக்களை காக்க அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.