தோனி குறித்து இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் கூறியிருக்கும் நெகிழ்ச்சி தகவல் ஒன்று ரசிகர்களின் மனதை உருகவைத்துள்ளது.
இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வலம் வந்த எம்.எஸ். தோனி கடந்தாண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவரின் சாதனைகளை நாடுகள் கடந்து ரசிகர்களும் அவ்வளவு எளிதில் மறக்காது இன்று வரை ரசிகர்கள் மிஸ் செய்வது சமூக வலைதளங்களில் நம்மால் காண இயலும்.
இந்த நிலையில் இந்திய அணியின் வீரர் கே.எல்.ராகுல் தோனி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் கேப்டன் என்று கூறினாலே அனைவரின் மனதிலும் முதலில் வருவது தோனியாக தான் இருக்கும் என்றும், இந்த தலைமுறைக்கு அப்படி ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஒரு கேப்டனுக்கு மிகப்பெரும் வெற்றி என்பது சக அணி வீரர்கள் அவருக்கு மிகுந்த மரியாதையை கொடுப்பது தான்.
தோனிக்காக எங்களில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி தோட்டாவை நெஞ்சில் வாங்கிக் கொள்வோம்.
யோசிக்க கூட மாட்டோம் எனவும், எந்தவொரு சூழ்நிலைகளிலும், நிதானத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து தான் கற்றுக் கொண்டதாகவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.